No icon

இரண்டாம் உலகப்போரின் மறைச்சாட்சியங்கள்

1945-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின்நாஜிபடையால் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட அருள்பணி மேக்ஸ் ஜோசப் மெட்ஜெர் அவர்கள் குறித்த விவரங்களையும், சோவியத் இராணுவ வீரர்களால் இரஷ்யாவில் கொல்லப்பட்ட 15 ஜெர்மன் அருள் சகோதரிகள் ஆகியோரின் மறைச்சாட்சிய வாழ்வையும், மூன்று வணக்கத்துக்குரியவர்களின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமைகள் குறித்த விவரங்களையும் புனிதர் பட்ட நிலைகளுக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் மார் செல்லோ செமராரோ திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் சமர்ப்பித்துள்ளார். அவ்வாறே ஏழு புதிய வணக்கத்துக்குரியவர்கள் குறித்த விவரங்களும் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் சீரோ-மலங்கரா பேராயர் கீவர்கீஸ் தாமஸ் பணிக்கரு வீட்டில் மார் இவானியோஸ், பிரேசில் நாட்டின் அருள்பணி லிபீரியோ ரோட்ரிக்ஸ் மொரேரா, குரோவேசியா நாட்டின் அன்டோனியோ டோமிஅமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறந்த மரியா அல்ஃபிண்டா ஹாவ்தோர்ன், இத்தாலியின் மடலேனா ஃப்ரெஸ்கோபால்டி கப்போனி, ஏஞ்சலினா பிரினி, எலிசபெட்டா ஜகோபுசி ஆகிய எழுவரையும் திருத்தந்தை பிரான்சிஸ் புதிய வணக்கத்துக்குரியவர்களாக அங்கீகரித்துள்ளார்.

Comment