No icon

போரும், குழந்தைகளும்!

போரினால் காசாவில் குழந்தைகள் பலவிதமான ஆபத்துகளைச் சந்திக்கின்றார்கள். காசாவின் இராஃபா பகுதியில் ஏறக்குறைய 6,00,000 குழந்தைகள் ஆபத்தில் இருப்பதாக யுனிசெஃப் நிறுவனம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளது. உக்ரைனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் போரில் ஏறக்குறைய 600 உக்ரைன் குழந்தைகள் இறந்துள்ளதாகவும், 15,00,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் மனநலப் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு கூறியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மொசாம்பிக்கின் கபோ டெல்கடோ பகுதியில் உள்ள மாநிலங்களில் 61,000க்கும் அதிகமான குழந்தைகள் தங்கள் இல்லங்களிலிருந்து கட்டாயமாக வெளியேற வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மியான்மரில் 2021-இல் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டதிலிருந்து 60 இலட்சம் குழந்தைகள் போதிய சத்துணவின்றி வாடுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. ஈக்குவடாரில் பாதுகாப்பு நிலைகளைக் காரணம் காட்டி, நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் 43 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. கூறியுள்ளது.

Comment