No icon

புலம்பெயர்ந்தோரின் தாய் கிரேசி SCN

ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குக் குடியேறும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்குச் சேவை செய்வதை, அருள்சகோதரி கிரேசி SCN (Sisters of Charity of Nazareth) தனது பணியாக மாற்றியுள்ளார். 1990களின் பிற்பகுதியில், வேலைக்காக, பொருளாதாரத்தைத் தேடி வட மாநிலங்களிலிருந்து, கேரளாவுக்குக் குடியேறியவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கல்வி மற்றும் சுகாதார அமைப்புகள் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தாலும், அவர்கள் பெரும்பாலும் உள்ளூர் மக்களிடமிருந்து பாகுபாட்டை எதிர்கொண்டனர். பலர் தங்கள் முதலாளிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட விலையுயர்ந்த கட்டணங்களில் குறைந்தபட்ச வசதிகளுடன் சிறிய, நெரிசலான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழ்ந்தனர். புலம்பெயர்ந்தோர் சிறிய தவறுகளுக்குப் பெரிய தண்டனை, ஓய்வு நாள் இல்லாமல் தண்டிக்கும் மனநிலை, ஓய்வெடுக்க இடமில்லாமல் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவது, தங்கள் ஊதியங்களைப் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை, பணிநீக்கம் போன்றவற்றால் தங்கள் குடும்பங்கள் உயிர் வாழ்வதற்காக ஒடுக்குமுறையைச் சகித்துக்கொள்வது போன்ற கொடுமைகளை அனுபவித்து வருகின்றார்கள். இந்நிலையில் கேரளாவில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் இத்தகைய புலம்பெயர்ந்தோருக்குத் தாயாக சகோதரி கிரேசி செயல்படுகின்றார்; அவர் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும் இருந்து வருகிறார்.

Comment