No icon

போர் என்பது வெற்றியல்ல!

ஹமாஸ் மற்றும் இஸ்ரயேல் போரில் காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 40,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 92,400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று காசாவின் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பயணிகளுக்கு வழங்கிய சிறப்புரையில் மோதலின் அதிகரிப்பைத் தவிர்க்க எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் தான் ஊக்குவிப்பதாகவும், பேச்சுவார்த்தை, உரையாடலின் பாதைகள் தொடரப்படுவதன் மூலம் போருக்கு ஒரு முடிவு கட்ட முடியும். போர் என்பது எப்போதும் தோல்வியைக் குறிக்கிறது என்பதையும் நினைவூட்டினார் திருத்தந்தை.

Comment