No icon

குடந்தை ஞானி

WHO அமைப்பின் உலகளாவிய செயல்பாட்டுத் திட்டம்

பெருந்தொற்று நோய்களை எதிர்கொள்வத்திலும் நம்மைத் தயாரிப்பதிலும், அதற்குப் பதிலுரைப்பதிலும் அனைத்துலக அளவிலான செயல்பாட்டுத் திட்டம் ஒன்று, WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு வருவது குறித்து திருப்பீடம் தன் வரவேற்பையும் பாராட்டையும் வெளியிட்டுள்ளது.

WHO நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளின் 150வது கூட்டத்தில் உரையாற்றிய ஜெனீவாவிலுள்ள ஐநா மற்றும் அனைத்துலக அமைப்புகளுக்ககான திருப்பீடக் குழுவின் முதன்மைச் செயலர் பேரருள்திரு ஜான் டேவிட் புட்சர் அவர்கள், உலகின் அனைத்துலக மக்களும் சரிநிகர் உரிமைகளுடனும், ஒருமைப்பாட்டுணர்வுடனும் நடத்தப்படவேண்டும் என்ற நோக்கத்தில் இந்தச் செயல்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவது குறித்து, திருப்பீடம் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.

பெருந்தொற்றுத் தொடர்புடைய ஆய்வுக்கருவிகள், தடுப்பு மருந்துகள் ஆகியவை அனைவருக்கும் கிடைக்க வழிசெய்யும் திட்டம், WHO நிறுவனத்தின் தலைமையில் உலக நாடுகளால் தயாரிக்கப்பட்டு வருவது குறித்து, ஏற்கனவே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜனவரி மாதத் துவக்கத்தில் திருப்பீடத்திற்கான வெளிநாடுகளின் தூதுவர்களைச் சந்தித்தபோது, குறிப்பிட்டதை பேரருள்திரு ஜான் டேவிட் புட்சர்சுட்டிக்காட்டினார்.

உலகவிலான ஒன்றிணைந்த ஒருமைப்பாட்டு நடவடிக்கைகள், இவ்வாண்டு மே மாதம், இடம்பெறயுள்ள உலக நலவாழ்வு நிறுவனத்தின் 75வது அவைக்  கூட்டத்தில், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு செயல்படத் துவங்கும் என்ற நம்பிக்கையையும் திருப்பீடப் பிரதிநிதி பேரருள்திரு ஜான் டேவிட் புட்சர் வெளியிட்டார்.

 

Comment