No icon

புனிதக் கதவு பற்றிய விதிமுறைகள்

2025 -ஆம் ஆண்டின் யூபிலிக் கொண்டாட்டங்களையொட்டி பேராலயங்களிலும் தேசியத் திருத்தலங்களிலும் புனிதக் கதவுகள் திறக்கப்படுவது குறித்த விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 2024, கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு முந்தைய நாளில் உரோம் நகர் புனித பேதுரு பெருங்கோவிலின் புனிதக் கதவு திறக்கப்படும். இதுபோல உலகிலுள்ள மறைமாவட்டப் பேராலயங்களிலும், பன்னாட்டு மற்றும் தேசியத் திருத்தலங்களிலும் புனிதக் கதவுகள் திறக்கப்படும். இவ்வருடம் திருத்தந்தையின் விருப்பப்படி சிறைச்சாலையிலும் புனிதக் கதவுகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  2025 -ஆம் ஆண்டு டிசம்பர் 28 -ஆம் தேதி உலகின் அனைத்து மறைமாவட்டப் பேராலயங்களின் கதவுகளும் மூடப்படும். 2026, சனவரி 6 -ஆம் தேதி திருக்காட்சித் திருவிழா கொண்டாட்டத்தின்போது யூபிலி ஆண்டு அதிகாரப்பூர்வமாக நிறைவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment