No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

தொழுநோயாளர்களுடன் நெருக்கத்தை வெளிப்படுத்திய திருத்தந்தை

ஜனவரி 30 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று ஹேன்சன்ஸ் நோய்  எனப்படும் தொழுநோய் விழிப்புணர்வு தினத்தன்று, தான் வழங்கிய மூவேளை செபஉரைக்குப் பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் நெருக்கத்தையும் ஒருமைப்பாட்டுணர்வையும் அறிவித்தார்.

மாண்பிற்காக ஒன்றிணைதல்என்ற தலைப்பில் இவ்வாண்டுச் சிறப்பிக்கப்பட்ட உலகத் தொழுநோயாளர் தினத்தை ஓட்டி, இந்த நெருக்கத்தை வெளியிட்ட திருத்தந்தை, தொழுநோயால் துயருறும் அனைத்து மக்களுக்கும் ஆன்மிக ஆதரவும், நலப்பணிகளும் வழங்கப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார்.

 இன்னும் பலரைத் துயரத்திற்கு உள்ளாக்கி வரும், குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களைத் துயரத்திற்கு உள்ளாக்கி வரும் இநோயால் பாதிக்கப்பட்டவர்களை, எவ்வித பாகுபாடும் காட்டாமல், அவர்களை சமூகத்தில் ஒன்றிணைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் திருத்தந்தை பிரான்சிஸ் முன்வைத்தார்.

மேலும், பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று, தூரக்கிழக்கு நாடுகளில் சந்திரப் புத்தாண்டு தினத்தைச் சிறப்பிக்க இருப்பதற்கும், ஜனவரி 31 ஆம் தேதி, புனித ஜான் போஸ்கோ விழா சிறப்பிக்கப்பட்டதற்கும் திருத்தந்தை தன் வாழ்த்துக்களையும் வெளியிட்டார்

Comment