No icon

குடந்தை ஞானி

உக்ரைனில் புலம்பெயர்ந்தோருடன் இந்திய அருள்சகோதரி

உக்ரைனில் மக்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதற்கு, கடவுள் என்னை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார் என்று, அந்நாட்டில் கடந்த இருபது ஆண்டுகளாக மறைப்பணியாற்றிவரும் இந்திய அருள்சகோதரி லிகி பையப்பிள்ளி அவர்கள் ஆசியச் செய்தியிடம் கூறியுள்ளார்.

உக்ரைன் நாட்டின் மேற்கிலுள்ள முகச்சேவோ நகரில் பணியாற்றுகின்ற, புனிதர்கள் யோவான் மற்றும் மாற்கு அருள்சகோதரிகள் சபையைச் சார்ந்த அருள்சகோதரி லிகி பையப்பிள்ளி அவர்கள், தனது சபையின் 17 அருள்சகோதரிகளோடு சேர்ந்து தங்கள் நகர் வழியாக சுலோவாக்கியா, ஹங்கேரி, ருமேனியா ஆகிய நாடுகளுக்குப் புலம்பெயரும் உக்ரைன் மக்களுக்கு உதவி வருகிறார்.

முகச்சேவோ கன்னியர் இல்லத்தின் தலைவராக பணியாற்றிவரும் 48 வயது நிரம்பிய அருள்சகோதரி லிகி அவர்கள், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், காவல்துறை மிகப்பெரிய பணியை ஆற்றுவதாகவும், இந்திய மாணவர்களில் பலர் நாட்டிற்குத் திரும்பிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்

Comment