No icon

“ஒருங்கிணைந்து பயணம்”

2 ஆம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் 60 ஆம் ஆண்டையொட்டி செய்தி

இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் தொடங்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டை முன்னிட்டு, உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலகம் செய்தி ஒன்றை அக்டோபர் 10 ஆம் தேதி, திங்களன்று வெளியிட்டுள்ளது.

1962 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் தொடங்கப்பட்டு, அக்டோபர் 11 ஆம் தேதி, அறுபது ஆண்டுகள் நிறைவுற்றதை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள அப்பொதுச் செயலகம், இவ்வாண்டு நிறைவு, உலக ஆயர்கள் மாமன்றத்திற்கும், திரு அவைக்கும் அருள்வழங்கும் ஒரு சிறப்பான தருணம் என்று குறிப்பிட்டுள்ளது.

மாமன்றத் தந்தையர்கள் பலர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் நான்காவது மற்றும் கடைசி நிகழ்வின்போது (செப்.15,1965) உலக ஆயர்கள் மாமன்றத்தை உருவாக்கினார். இம்மாமன்றம், தன்னிலே அப்பொதுச்சங்கத்தின் கனியாகும் மற்றும் இது மிக விலைமதிப்பற்ற மரபுரிமைச் சொத்தாகும் (திருத்தந்தை பிரான்சிஸ் கூறியிருப்பதுபோன்று) என்று அச்செய்தி கூறுகிறது.

திரு அவையின் வாழ்விலும் மறைப்பணியிலும் இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் உணர்வைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதும், அச்சங்கத்தின் போதனைகளுக்கு ஏற்ப இறைமக்களின் வாழ்வை ஊக்குவிப்பதுமே, உலக ஆயர்கள் மாமன்றத்தின் நோக்கம் என்பதையும் அச்செயலகம் குறிப்பிட்டுள்ளது. “திரு அவையின் வாழ்விலும் மறைப்பணியிலும் ஒருங்கிணைந்து பயணம்என்ற தலைப்பில் இடம்பெற்றுவரும் உலக ஆயர்கள் மாமன்ற நடைமுறை, அப்பொதுச்சங்கத்தைப் பின்பற்றியே நடக்கின்றது. மற்றும் அது, இறைமக்களின் அப்பொதுச்சங்க இறையியலில் வேரூன்றப்பட்டுள்ளது என்று அச்செயலகம் கூறியுள்ளது.

ஒருங்கிணைந்து பயணம்என்பது, அப்பொதுச்சங்கத்தின் கொள்கைத்திரட்டுகளில் காணப்படாவிடினும், அந்தக் கருத்தியல் அப்பொதுச்சங்கம் முழுவதிலும் வெளிப்பட்டுள்ளது என்றும், ஒன்றிப்பு, பங்கேற்பு, மறைப்பணி ஆகிய மூன்று சொல்லாடல்களும் அப்பொதுச்சங்கத்தின் சிறப்பான சொற்கள் என்றும் அச்செயலகம் கூறியுள்ளது. கனவு காணவும், கட்டியெழுப்பவும் நம்மை அழைத்துள்ள திரு அவை, மூவொரு கடவுளின் உருவில் ஒரே நம்பிக்கை, ஒரே திருமுழுக்கு மற்றும் அதே திருநற்கருணையால் ஒன்றிப்பில் வாழ ஈர்க்கப்பட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்களைக் கொண்ட ஒரு குழுமமாகும் என்று அச்செய்தி உரைக்கின்றது.

ஒருங்கிணைந்து பயணம்என்பதை, திரு அவையின்இணைந்து உருவாக்குகின்ற கூறுஎன்றே, முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் விளக்கியுள்ளனர் என்றுரைக்கும் அச்செய்தி, “ஒருங்கிணைந்த பயணத்தின்பாதை, மூன்றாம் மில்லியனில் திரு அவையிடமிருந்து கடவுள் எதிர்பார்க்கும் பாதையாகும் என்று 16 வது உலக ஆயர்கள் மாமன்ற நடைமுறையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்திருப்பதையும் குறிப்பிட்டுள்ளது.

Comment