No icon

பிரேசில் தவக்கால முயற்சிக்கு திருத்தந்தையின் செய்தி

ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தில் உடன்பிறந்த நிலை கொள்கைபரப்பு முயற்சி என்ற பெயரில் பிரேசில் ஆயர்பேரவை மேற்கொள்ளும் முயற்சியின் தொடர்ச்சியாக இவ்வாண்டு நடத்தப்படும் கொள்கைப்பரப்பு முயற்சிக்கு திருத்தந்தை தனது வாழ்த்துச்செய்தியை அனுப்பியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு தவக்காலத்திற்கென்று பிரேசில்
ஆயர்கள், ’உடன்பிறந்த தன்மையும், பொதுநலக்கொள்கை களும்’ என்ற தலைப்பில் ’நீதி உங்களை மீட்கும்: நேர்மை உங்களை விடுவிக்கும்’ என்ற மையச் சிந்தனையில் பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு வரு
கின்றனர். பொதுநலக்கொள்கைகள் என்பது பொதுவாக
அரசுகளின் பொறுப்பு என்பதை நாம் உணர்ந்தாலும், அக்கொள்கைகளை உருவாக்குவதிலும், அதனை நிறைவேற்றுவதிலும் மக்களாகிய நமக்கும் பெரும் பங்குள்ளது. மக்களுக்காக பணியாற்றும் ஆழ்மன உந்துதலுடன் அரசியலில் ஈடுபடுவோர் சமுதாயப் பொதுநலனை எப்போதும் தங்கள் கண்முன் கொண்டு பணியாற்ற வேண்டும் எனக் கேட்கின்றார். இவ்வாண்டு துவங்கியுள்ள தவக்காலப் பயணத்தில் கிறிஸ்துவின் காயப்பட்ட உடலாக விளங்கும் வறியோர் மற்றும் தேவையில் இருப்போருடன் இந்தப் பயணம் தொடர வேண்டும் என்ற வேண்டுதலுடன் தனது செய்தி யினை நிறைவு செய்கின்றார்.

Comment