No icon

பேராயர் கேப்ரியல் காசியா

மரண தண்டனை ஒழிப்பு கடைபிடிக்கப்படவேண்டும்

மனிதரின் மாண்பு, பொது நலனைப் பாதுகாப்பதற்கான  சட்டப்பூர்வமான அதிகாரத்தின் பங்கு ஆகியவற்றின் அடிப்படையில் மரண தண்டனையை ஒழிப்பதற்கான உறுதியான ஆதரவினைத் திருப்பீடம் அளித்து வருகின்றது எனவும், "பொது ஒழுங்கு மற்றும் மனிதர்களின் வாழ்வைப் பாதுகாக்கதண்டனை முறைகளில் உள்ள பல்வேறு முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, மரண தண்டனையைக் கடைபிடிக்கக்கூடாது என்றும் பேராயர் கேப்ரியல் காசியா வலியுறுத்தியுள்ளார்.

ஒரு குற்றவாளி எப்படி இருந்தாலும் அவர் செய்த குற்றம் எத்தகைய கொடியதாக இருந்தாலும் மனித மாண்பு இழக்கப்படாதிருக்கவேண்டும் எனவும்வாழ்வதற்கான உரிமை என்பது ஒவ்வொரு மனிதனின் பிரிக்க முடியாத மனித மாண்பு எனவும்இது இல்லாவிட்டால் மனித உரிமைகள் என்னும் கட்டிடம் சரிந்து விழுந்து விடும் என்றும், மனித மாண்பினால் சமப்படுத்தப்படும் மனித உரிமைகள், சமூகம் முழுவதற்கும் குறிப்பாக நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள் மற்றும் ஊனமுற்ற நபர்களைப் பராமரிப்பதற்குப் பொறுப்பான துறைகளில் நலமான விளைவுகளை ஏற்படுத்துகிறது எனவும், மரண தண்டனை கலாச்சாரத்தினை மாற்றியமைக்கவும், பொது நலனைப் பாதுகாக்கவும் அயராது உழைக்க வேண்டும் எனவும் பேராயர் கேப்ரியல் காசியா எடுத்துரைத்துள்ளார்.

தவறுக்கு கொடுக்கப்படும் தண்டனை, பாரபட்சமற்ற அன்பு மற்றும் நீதியினால் ஆன வழிமுறைகள் மட்டுமே  இருக்கவேண்டும் எனவும், மரண தண்டனை என்னும் பழிவாங்குதல் ஒருபோதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலனளிக்காது என்றும், திருத்தந்தை வலியுறுத்துவது போல, குற்றங்கள்  எவ்வளவுக் கொடூரமானவையாக இருந்தாலும், அவற்றைச் செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவது ஏற்பட்ட தீங்கை சரிசெய்ய உதவாது என்றும், இது ஒருபோதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்கு இணையாகாது என்றும் பேராயர் கேப்ரியல் எடுத்துரைத்தார்.

மரணதண்டனை என்னும் பழிவாங்கல் எதற்கும் தீர்வாகாது, குற்றவாளிகள்  செய்த குற்றம் எதுவாக இருந்தாலும் அனைத்து நிலைகளிலும் வாழ்வதற்கான அவர்களின் உரிமையைப் பாதுகாப்பதே ஆட்சியாளர்களின் இன்றியமையாத பொறுப்பு எனத் திருப்பீடம்  கருதுகிறது எனவும், மனித உயிரின் முதன்மை, பாதுகாப்பு மற்றும் மனித மாண்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் மரண தண்டனை ஒழிப்பை ஆதரித்து அனைத்து நாடுகளும்  ஒரு நிலையான நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கிறது என்றும் பேராயர் கேப்ரியல் காசியா கூறியுள்ளார்.

Comment