No icon

கர்தினால் ஆர்த்தர் ரோச்

Motu Proprio அறிக்கையில் திருத்தந்தை சுட்டும் இரண்டு காரியங்கள்

தன் சொந்த விருப்பத்தினால் வெளியிடும் Motu Proprio அறிக்கை வழியாக ஆயர்களுக்கு இரண்டு முக்கியமான காரியங்களை திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். பிப்ரவரி 20 ஆம் தேதி, திங்களன்று, திருப்பயணிகளின் தனிப்பட்ட சந்திப்பைத் தொடர்ந்து, இறைவழிபாடு மற்றும் அருளடையாளங்களின் ஒழுங்குமுறை பேராயத்தின் தலைவர் கர்தினால் ஆர்த்தர் ரோச் அவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் இணைந்து இவைகளைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

உரையாற்றப்பட்ட இந்த இரண்டு காரியங்களும் ஊடகங்கள் உட்பட பல்வேறு கலந்துரையாடல்களுக்கும் அண்மைக்கால விவாதங்களுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.

பங்குத்தள ஆலயங்களைத் திருப்பலி கொண்டாட்டங்களுக்குப் பயன்படுத்த அனுமதிக்கும் முன் ஆயர்கள் திருத்தந்தையிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்று இவ்வறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2021 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதிக்குப் பிறகு அருள்பணியாளர்களாக அருள்பொழிவு செய்யப்பட்டவர்கள் 1962 ஆம் ஆண்டின் உரோமன் திருப்பலி புத்தகத்தை பயன்படுத்த அனுமதிப்பதற்கு முன் ஆயர்கள் திருத்தந்தையிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

Traditionis custodes (Guardians of the Tradition) என்பது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் வெளியிடப்பட்ட ஒரு திருத்தூதுத் திருமடல் ஆகும். 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட இம்மடல், இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்திற்கு முந்தைய திருச்சடங்குகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து அறிவிக்கிறது.

 

 

Comment


TOP