No icon

பேராயர் பால் ரிச்சர்டு காலகர்

நல்லிணக்கச் செயல்பாடுகளுக்கான இடம் வத்திக்கான்

நாம் அனைவரும் அமைதிக்கான பசியுடன் இருக்கிறோம், நல்லிணக்கப் பாதைகள் பின்பற்றப்படாவிட்டால் இந்த அமைதியை அடைய முடியாது என்றும், வத்திக்கான் என்பது நல்லிணக்கத்தின் செயல்பாடுகளுக்கான இடமாகும் என்றும் திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் கூறியுள்ளார்ஏப்ரல் 24 திங்கள், 25 செவ்வாய் ஆகிய நாள்களில் லிச்சென்ஸ்டைனில் அரசியல் செயல்பாடுகள் மற்றும் நற்செய்தி என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று பேசிய போது பேராயர் பால் ரிச்சர்டு காலகர் இவ்வாறு கூறியுள்ளார்.

அமைதி மற்றும் மனித மாண்பிற்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய பேராயர் காலகர் அவர்கள், ஐரோப்பாவும் அமைதிக்கான அச்சுறுத்தலை முன்னெப்போதையும் விட அதிகமாக உணர்கிறது, துன்புறுத்தப்பட்ட உக்ரைன் நிலத்திற்கு எதிரான இரஷ்யாவின் சோகமான ஆக்கிரமிப்புப் போரினால் பாதிக்கப்பட்டுள்ளதால், இனி எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.

அமைதியை நோக்கி நகரும் செயலாக நாட்டை விட்டு வெளியேறுதல் நடைபெறுகின்றது என்றும், போர் சுழலில் இருந்து தனிநபர்கள், நாடுகள், மக்களை வழிநடத்துதல் உரையாடல் மற்றும் பொது நன்மைக்கான தேடலின் பாதையில் அமைதிக்கான செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றும் பேராயர் காலகர் எடுத்துரைத்துள்ளார்.

இரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே அமைதி மத்தியஸ்தம் செய்வதற்கான வாய்ப்புகள் இன்னும் இல்லை என்பதை எடுத்துரைத்த பேராயர் காலகர் அவர்கள், தங்களது சொந்த நலன்களைக் கவனித்துக் கொள்ளும் தனிப்பட்ட அரசுகளைப் போலல்லாமல் நாட்டின் பொது நலனை மேம்படுத்துவதில் அக்கறை கொண்டு திருப்பீடம் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது என்றும் கூறியுள்ளார்.

திருத்தந்தை மற்றும் திருப்பீடத்தின் அனைத்து முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தபோதிலும், இரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே அமைதிக்கு ஆதரவாக பயனுள்ள வழிகள் எதுவும் இன்னும் திறக்கப்படவில்லை என்பதை எடுத்துரைத்த பேராயர் காலகர், பல்வேறு வகையான போர்களை எதிர்கொள்ளும் தோல்விகளாக இப்போர்கள் காட்சியளிக்கின்றன என்றும் கூறியுள்ளார்.

புவிசார் அரசியல் சூழ்நிலை மிகவும் வேறுபட்டதாகவும், துருவப்படுத்தப்பட்டதாகவும், அனைத்து உறவுகளையும் சிதைப்பதாகவும் இருப்பதால், எந்த மறுசீரமைப்பும் மிகவும் கடினமாகிவிடுகின்றது என்றும், பணம் மற்றும் ஆயுதங்களின் செயல்பாடுகள் தான் பெரும்பாலும் எரிபொருளை வழங்குகின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

"ஆயுதங்கள், வன்முறை மற்றும் பயங்கரவாதத்திற்கு மாற்றாக தனிநபர்களுக்கும் மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையைத் தாங்கி அதன் பங்கை மீண்டும் கண்டறிய வேண்டிய ஒரு அரசியல் நடவடிக்கையை திரு அவை ஆதரிக்கிறது என்றும், உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்தின் திசையாக மாறும் ஒரு செயல், நடவடிக்கை நடைபெற வேண்டும் என்றும், பரஸ்பர உரிமைகோரல்கள், சகோதர விரோத எதிர்ப்புகள், மற்றவர்களை எதிரிகளாகக் கருதுவது, மற்றவரை முற்றிலுமாக நிராகரிப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

Comment