No icon

50,000 பலிபீடச் சிறார்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு

இருபது ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 88 மறைமாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 50,000 பலிபீடச் சிறார்கள் ஜூலை 29 முதல் ஆகஸ்டு 2 வரை நடைபெறும் பலிபீடச் சிறார்களின் 13-வது உலக மாநாட்டில் பங்கேற்க உரோம் நகரத்திற்கு வந்துள்ளனர். 1961 -ஆம் ஆண்டு முதல் மாநாடு நடத்தப்பட்டது. அதிலிருந்து ஆண்டுதோறும் இந்த மாநாடு நடத்தப்படுகின்றது. இந்த ஆண்டின் மையச்சிந்தனைஉங்களோடு’ (எசாயா 41:10) என்ற வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு, “பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; கவலைப்படாதே, நான் உன் கடவுள். நான் உன்னைப் பலப்படுத்தி உனக்கு உதவி செய்வேன்; என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன்என்ற இறைவார்த்தையின் பின்னணியில் சிறார்களுக்குக் கருத்துகள் வழங்கப்படும். உரோம் நகரம் நம் உலகளாவிய சமூகத்தின் பன்முகத்தன்மையையும், ஒற்றுமையையும் அனுபவிக்க உதவுகிறது என்று கர்தினால் ஜீன்-கிளாட் ஹோலரிச் கூறினார்.

Comment


TOP