No icon

‘அருள்சகோதரிகளின் குணமளிக்கும் இதயங்கள்’-திருத்தந்தை

‘தாலித்தா கும் (கூயடiவாய முரஅ)’ எனப்படும், அருள்சகோதரிகளின் மனித வர்த்தகத்திற்கு எதிரான உலகளாவிய அமைப்பு தொடங்கப்பட்டதன் பத்தாம் ஆண்டையொட்டி, ‘அருள்சகோதரிகளின் குணமளிக்கும் இதயங்கள் (சூரளே ழநயடiபே ழநயசவள)’ என்ற தலைப்பில், கண்காட்சி ஒன்றை, மே 10 ஆம் தேதியன்று திருத்தந்தை பிரான்சிஸ் ஆரம்பித்து வைத்தார்.
ருஐளுழு எனப்படும், உலகளாவிய பெண் துறவு சபைகளின் தலைவர்கள் அமைப்பு, மே 6 ஆம் தேதி  முதல், மே 10 ஆம் தேதி வரை, உரோம் நகரில் 21வது பொது அமர்வை நடத்தியது. 
ருஐளுழு அமைப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர்-குடிபெயர்ந்தோர் திருப்பீடத் துறையின் ஒத்துழைப்புடன், கலிலேயோ அறக்கட்டளையின் உதவியுடன், அருள்சகோதரிகளின் குணமளிக்கும் இதயங்கள்’ என்ற கண்காட்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது, ருஐளுழு தலைமை அலுவலகத்தில், வருகிற ஜூலை 10ம் தேதி வரை வைக்கப்பட்டிருக்கும். மனித வர்த்தகம் சார்ந்த புகைப்படங்கள், மனித வர்த்தகத்தை ஒழிக்க அருள்சகோதரிகள் ஆற்றும் பணிகள் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.
ருஐளுழு அமைப்பில், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, ஏறத்தாழ நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் அருள்சகோதரிகளைக் குறிக்கும், துறவு சபைகளின் 1,900 தலைவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

Comment