No icon

ACN - கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பின் 2018 ஆண்டறிக்கை

‘தேவையில் உள்ள திருஅவைக்கு உதவி’ என்ற பொருள்படும், Aid to the Church in Need - ACN, என்ற கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பு, 2018 ஆம் ஆண்டு, தன் பணிகளுக்கு 11 கோடியே, 11 இலட்சம் யூரோக்கள் நிதியைத் திரட்டி, பல்வேறு நாடுகளுக்கு வழங்கியுள்ளது என்று, இவ்வமைப்பின் 2018 ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. 23 நாடுகளில் உள்ள 3,30,000 தனிப்பட்டோரின் தாராள கொடைகளால் திரட்டப்பட்ட இந்த நிதி, 139 நாடுகளில் 5,019 பணிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது என்று இவ்வறிக்கை கூறியுள்ளது.
கொடையாளிகளின் தாராள உள்ளம் தங்களை ஆழமாகத் தொட்டுள்ளது என்றும், அவர்களின் நம்பிக்கையும், தியாகமும் மலைகளை பெயர்த்துள்ளன என்பதை, அவர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் என்றும், ஹஊசூ உலக அமைப்பின் இயக்குனர்,தாமஸ் ஹெடீநுனே கெல்டர்ன் (கூhடிஅயள ழநiநே-ழுநடனநசn) அவர்கள் கூறியுள்ளார். திரட்டப்பட்ட நிதியிலிருந்து, 27 விழுக்காடு, ஆப்ரிக்க நாடுகளுக்கும், 25 விழுக்காடு, மத்தியக் கிழக்குப் பகுதிக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று இவ்வறிக்கை கூறியுள்ளது.
ஹஊசூ வழங்கிய உதவிகளில், 86 இலட்சம் யூரோக்கள் சிரியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும்
இது 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிதியைக் காட்டிலும், 29 இலட்சம் கூடுதல் என்றும் இவ்வறிக்கை யில் தெரிய வந்துள்ளது. பகிர்ந்தளிக்கப்பட்ட நிதியில், 31.9 விழுக்காடு, வீடுகள், சிற்றாலயங்கள், துறவு இல்லங்கள், மேடீநுப்புப்பணி மையங்கள் ஆகியவை கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஹஊசூ திரட்டியுள்ள நிதியின் பெரும்பங்கு 40,569 அருள்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், இதற்கு அடுத்தபடியாக, அருள்பணியாருக்கென பயிற்சி பெறும் 11,817 இளையோருக்கு உதவிகள் வழங்கப்பட்டன என்றும் இவ்வறிக்கையில் கூறப் பட்டுள்ளது. ஹஊசூ அமைப்பு 2018 ஆம் ஆண்டு திரட்டிய நிதியிலிருந்து, 11.2 விழுக்காடு, மறைக்கல்வி ஆசிரியர்களாக, பொதுநிலையினரின் தலைவர்களாக பணியாற்றும் 14,169 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று இவ்வறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நம் வாடிநவின் ஆசிரியர் குடந்தை ஞானி அவர்கள் நம் வாடிநவுக்கென்று ஒரு நான்கு சக்கர வாகனம் வாங்குவதற்கு கொடுத்த கோரிக்கையை ஹஊசூ அமைப்பு ஏற்று உதவி செடீநுதுள்ளது என்பது இங்கே மிகவும் பாராட்டத்தக்கது.

Comment