No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

மறைசாட்சிகளின் புண்ணிய வாழ்வுப் பண்புகள் ஏற்பு

மறைசாட்சிகளின் புண்ணிய வாழ்வுப் பண்புகள் ஏற்பு

 

புனிதர் மற்றும் முத்திப்பேறுபெற்ற நிலைகளுக்கு உயர்த்துவதற் கென இடம்பெற்ற ஒரு புதுமை யையும், புண்ணிய வாழ்வுப் பண்பு களையும், திருத்தந்தை பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டுள்ளார்,

திருப்பீட, புனிதர் நிலை பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பெச்சு  அவர்கள், ஜனவரி 15,செவ்வாயன்று, திருத்தந்தைபிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து, 17 பேர் பற்றிய விவரங்களைச் சமர்ப்பித்தார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் லா பியரஸ் என்னுமி டத்தில்  1815 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி பிறந்த முத்திப்பேறுபெற்ற, அசிசி நகர் புனித பிரான்சிசின் மூன்றாம் சபையைச் சார்ந்த மார்கரிட்டா பேஸ்  அவர்களின் பரிந்துரையால் ஒரு புதுமை இடம் பெற்றுள்ளது. மார்கரிட்டா பேஸ், சுவிட்சர்லாந்து நாட்டின் சிவிரியஸ் என்னுமிடத்தில் 1879 ஆம் ஆண்டு, ஜூன் 27 ஆம் நாளன்று காலமானார்.

பிரான்சிஸ்கன் சபையின் இறைஊழியர் மரியா டெல் கார்மன் மற்றும் அவரோடு சேர்ந்து 13 அருள்சகோதரிகள், 1936 ஆம்ஆண்டில், ஸ்பெயின் நாட்டில் விசுவாசத்திற்காகக் கொல்லப் பட்டனர்.

போலந்து நாட்டில் 1872 ஆம் ஆண்டு பிறந்து, 1936 ஆம் ஆண்டில் காலமான, அதிதூதர் மிக்கேல் அருள்சகோதரிகள் சபையைஆரம்பிக்க உதவிய அன்னா காவோரக், பியூர்ட்டோ ரிக்கோ நாட் டில் 1892 ஆம் ஆண்டு பிறந்து, 1973 ஆம் ஆண்டில் காலமான, நோயாளர் பராமரிப்பு சபையின் அருள்சகோதரி  மரியா சோலேடாட் சான்ச்சுரோ சான்தோஸ் ஆகிய இரு இறைஊழியர்களின் புண்ணிய வாழ்வுப் பண்புகளையும், திருத் தந்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

Comment