No icon

“அறிவோம் நமது சுதந்திரம்”

இந்திய சுதந்திர அமுதப் பெருவிழா

இந்தியர்களாகிய நாம், நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததின் பவள விழாவினை இவ்வாண்டு முழுவதும் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். இதற்கு முத்தாய்ப்பாக தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் மற்றும் நீதியரசர் பஷீர் அஹமத் சயீத் மகளிர் கல்லூரி இணைந்துஅறிவோம் நமது சுதந்திரம்என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றை 10 ஆம் தேதி, புதன்கிழமை காலை 10 மணி அளவில், அம்மகளிர் கல்லூரி கலைஅரங்கத்தில் நிகழ்த்தியது. “இந்திய சுதந்திர அமுதப் பெருவிழாஎன்ற தலைப்பிலே இவ்விழாவானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் மாண்புமிகு அமைச்சர் திரு சா. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தலைமையிலும், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு செஞ்சி கே. எஸ். மஸ்தான் அவர்கள் முன்னிலையிலும் மற்றும் கல்லூரியின் தாளாளர் முதல்வர் என பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க இவ்விழாவானது இனிதே நடந்தேறியது. இவ்விழாவினை தலைமை ஏற்று நடத்திய தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் மாண்புமிகு அமைச்சர் திரு சா. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் போன்ற சிறுபான்மையினர் இந்திய சுதந்திரத்திற்காக பல்வேறு தியாகங்களை செய்திருக்கிறார்கள். ஆனால் அவையெல்லாம் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் தீண்ட தகாத சமூகங்களாக கருதப்பட்டு வரும் பல சமூகங்களிலிருந்து, பல்வேறு மக்கள் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்திருக்கிறார்கள். ஆனால் அவையெல்லாம் மறைக்கப்பட்டிருக்கின்றன என்று கூறினார். அவரைத் தொடர்ந்து மானசீகன் எனும் முகம்மது ரபிக், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் செய்த மிகப்பெரிய தியாகங்களை எடுத்துச்சொல்லி, இங்கிருந்த கிறிஸ்தவர்கள் ஆங்கிலேய கிறிஸ்தவர்களோடு கைகோர்த்து செல்லவில்லை. மாறாக சுதந்திரத்திற்காக ஆங்கிலேய கிறிஸ்தவர்களையும் எதிர்த்தார்கள் என்று கூறினார். அவரை தொடர்ந்து பேசிய சமூக நீதிக் கண்காணிப்பு குழுவின் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், தமிழர்களின் சுதந்திர தியாகங்கள் மறைக்கப்பட்டு, இருட்டடிப்பு செய்யப்பட்டிருகின்றன. தமிழ்நாட்டிலே, வேலூர் மாவட்டத்திலே முதன் முதலில் சுதந்தரித்திற்கான அடித்தளம் 1806 இல் துவங்யது. ஆனால் இப்புரட்சியானது சிப்பாய் கலகம் என்றழைக்கப்பட்டு நீர்த்துப்போகச் செய்யப்பட்டது என்று கூறினார்தமிழ் துறை பேராசிரியர் திருமதி பர்வீன் சுல்தான் அவர்கள் இந்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வழங்கினார். இறுதியாக நாட்டுப்பண்ணோடு இந்நிகழ்வானது இனிதே நிறைவடைந்தது.

Comment