சமூகக் குரல்கள்
- Author ஸ்ரீநிதி --
- Wednesday, 30 Oct, 2024
“உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் உணவு உற்பத்தி அமைப்பை உருவாக்க வேண்டிய தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பூமியைச் சுற்றி அதிகரிக்கும் சுற்றுச்சூழல் ஆபத்துகளும் அதன் அத்தியாவசியத்தை நமக்கு வலியுறுத்துகின்றன. பூமியையும், சுற்றுச்சூழலையும் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உயிர் சக்தி வேளாண்மை இன்றியமையாதது. இயற்கை வேளாண்மை, உயிர் சக்தி விவசாய முறைகள் சிறு விவசாயிகளுக்கும் எதிர்காலச் சந்ததியினருக்கும் நன்மை தரும். இதில் கடைப்பிடிக்கப்படும் உத்திகள் சுற்றுச்சூழல் பாதிப்புகளில் இருந்து நம்மை மீட்கின்றன. நவீன வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகிய இரண்டையும் சமநிலையுடன் நீண்டகாலத்துக்கு முன்னெடுக்க வேண்டும்.”
- திரு. ஹெச்.கே. பாட்டீல், கர்நாடக சுற்றுலாத் துறை அமைச்சர்
“எதிர்காலத்தில் தமிழ் நிலைநாட்டப்பட வேண்டுமானால் அது நம் குழந்தைகளின் கைகளில்தான் உள்ளது. மழலைக் கல்வி தொடங்கும்போதே, அவர்களுக்குத் தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்து தமிழ்மொழி மீதான பற்றை ஏற்படுத்த வேண்டும்.”
- திருமதி. இரா. மனோன்மணி, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் துணை இயக்குநர்
“தற்போது நாட்டில் உள்ள 45 ஆயிரம் கல்லூரிகள் மற்றும் 1,200 பல்கலைக்கழகங்கள் மூலம் ஆண்டுக்கு 4.3 கோடி பேர் உயர் கல்வி படித்து வருகின்றனர். இவர்களில் சுமார் 6 லட்சம் பேர் கணினி அறிவியல் கல்வி பயில்கின்றனர். அகில இந்திய அளவில் தற்போது 28.3 சதவிகிதமாக இருக்கும் உயர் கல்வி பெறுவோர் எண்ணிக்கையை, அடுத்த 11 ஆண்டுகளில் 50 சதவிகிதமாக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உயர் கல்வி பெறுவோர் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வரும் நிலையில், திறமை மிகுந்தவர்களுக்குதான் வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே, வேலைவாய்ப்பைப் பெறவும், கிடைத்த வேலைவாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் அறிவாற்றலுடன், இதரத் திறமைகளையும் மேம்படுத்தி கொள்ள வேண்டும்.”
- திரு. டி.ஜி. சீதாராம், இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவர்
Comment