No icon

இமாச்சலப் பிரதேசம்

எதிர்வழக்கு தொடுத்த கிறிஸ்தவர்கள்

இந்து சார்பு பாரதிய ஜனதா கட்சி, தான் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் எல்லாம், கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக குற்றம் சாட்டி, மதமாற்ற தடைச் சட்டத்தை தான் ஆளும் மாநிலங்களில் ஒன்றன் பின் ஒன்றாக திணித்துக் கொண்டு வருகிறது. இந்த வரிசையில் இமாச்சலப் பிரதேசத்தில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக இந்த மதமாற்ற தடை சட்டத்தை ஒரு அச்சுறுத்தும் ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது. ஒரு சில இந்து அடிப்படைவாத குழுக்கள், இமாச்சலப் பிரதேசத்தில், மக்கள் கூட்டம் கூட்டமாக, கட்டாய மதமாற்றத்திற்கு உள்ளாக்கப்படுவதாக வழக்கு தொடுத்து இருக்கின்றனர். இதை எதிர்த்து அங்கு வாழும் கிறிஸ்தவர்களின் பிரதிநிதியான, சிம்லாவின் ஆன்மீககுரு சோகம் லால் எதிர்வழக்கு தொடுத்து இருக்கிறர். சிறுபான்மை மக்களான கிறிஸ்தவர்களே இங்கு அதிக பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இதை மறைப்பதற்காக இப்படியொரு பொய்வழக்கு தொடுத்துள்ளனர். இதை எதிர்த்து நாங்களும் வழக்கு தொடுத்துள்ளோம். கண்டிப்பாக எங்களுக்கு நீதி கிடைக்குமென நம்புகிறோம் என்று ஆகஸ்ட் 13 ஆம் தேதி, UCA செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். கிறிஸ்துவ ஐக்கிய இயக்கத்தின் வழிகாட்டியான A.C. மைக்கேல், “இது அடிப்படை ஆதாரமில்லாத ஒரு குற்றச்சாட்டு. மக்கள் கூட்டம் கூட்டமாக கிறிஸ்துவத்திற்கு மதமாற்றப்படுகிறார்கள் என்றால், அதற்கான ஆதாரத்தை தர வேண்டும். எங்கு இது போன்ற மதமாற்றம் நடந்தது? யார் இந்த மத மாற்றத்தை நிகழ்த்தினார்கள்? போன்ற விஷயங்கள் ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட வேண்டும்என்று கூறினார்.  

Comment