No icon

ஆகஸ்ட் 14 - கேரளா

கல்லறை அடக்கம் தேவையில்லை-கிறிஸ்தவர்கள் உறுதிமொழி

தென்னிந்திய மாநிலமான கேரளாவில்பல்வேறு சபைகளை சார்ந்த கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடிநாங்கள் கிறிஸ்துவ நம்பிக்கையின் படி எங்கள் உடல்களை புதைப்பதற்கு கையளிக்க மாட்டோம். மாறாக பிறருக்கு உதவும்படி அதை தானமாக கொடுப்போம்என்று ஆகஸ்ட் 14 - ஆம் தேதி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பல்வேறு சபைகளை சார்ந்த கிறிஸ்தவர்கள் இணைந்திருக்கும் ஒன்றிணைந்த கிறிஸ்தவ குழு என்ற அமைப்பானது இந்நிகழ்வை முன்னின்று நடத்தியது. இந்த குழுவினுடைய தலைவர் J. புல்லுடான், “எங்களுடைய இந்த உறுதிமொழிக்கு காரணம் மக்களிடையே உடலைப் பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே. மண்ணில் புதைப்பட்டு, மக்கி வீணாய் போவதை விட அது மற்றவருக்கு பயனுள்ளதாக இருப்பதே சிறந்தது. எனவே எங்கள் குழுக்களில் இருப்பவரின் உடல்களை எங்களின் மரணத்திற்கு பிறகு மருத்துவமனைகளுக்கோ அல்லது மருத்துவ கல்லூரிகளுக்கு நாங்கள் கையளிப்போம் என்று நாங்கள் முடிவு எடுத்திருக்கிறோம். மேலும் இன்றைய திரு அவையில், இறப்பு சடங்கானது மிகவும் ஆடம்பரமான ஒன்றாக அதிக விலை கொண்ட ஒன்றாக மாறியிருக்கிறது. அதிக பொருட்செலவில் செல்வந்தர்கள் குடும்ப கல்லறைகள் கட்டுகின்றனர். ஆனால் ஏழைகளுக்கு இத்தகைய வாய்ப்பு இல்லை. மேலும் கல்லறைகளிலும் சாதிய அடக்கு முறையானது கடைபிடிக்கப்படுகிறது. இவை அனைத்துமே கிறிஸ்தவ போதனைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் எதிரானவை. எனவேதான் எங்களது உடல்களை பிறருக்கு பயன்படும்படி கையளிக்க நாங்கள் உறுதிகொண்டுள்ளோம்என்று மேட்டர்ஸ் இந்தியா செய்தி நிறுவனத்திடம் கூறினார். மேலும் இக்குழு உறுப்பினர் இன்டுலேகா ஜோசப் என்கிற பெண் வழக்கறிஞர், “அண்மையில் இறந்து போன என்னுடைய தந்தையின் உடலை நான் திரு அவையின் வழக்கப்படி புதைக்காமல் ஒரு மருத்துவ கல்லூரிக்கு அதை தானமாக வழங்கினேன்என்று கூறினார்.

Comment