No icon

உலக உணவு நாள்

பசி பட்டினியில் இந்தியா

அக்டோபர் 16, 2002 ஞாயிறன்று உலக உணவு நாள் கொண்டாடப்பட்டது. இது குறித்து மேட்டர்ஸ் இந்தியா செய்தி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இருதய ஜோதி அவர்கள் பின்வரும் தகவல்களை பகிர்ந்துள்ளார்.

யாரையும் விட்டுவிடாதீர்கள்என்ற இலக்கோடு 2022 ஆம் ஆண்டின் உலக உணவு நாளானது சிறப்பிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளின் உணவு நிலை பற்றி ஆராய்ந்து பார்த்ததில் நமது இந்திய நாடானது இன்னும் பசி பட்டினி நிறைந்த நாடாகவே காணப்படுகிறது என்பது வருத்தத்தை தருகிறது. 2020 ஆம் ஆண்டின் கணக்குப்படி பசி பட்டினி நிறைந்த 107 நாடுகளில், இந்தியா 94 வது இடத்தில் இருந்தது. 2021 இல் 116 நாடுகளில் இந்தியா 101 வது இடத்தில் இருந்ததுஇந்த நடப்பு ஆண்டில் 121 பசி பட்டினி நிறைந்த நாடுகளில் இந்தியா 107வது இடத்தில் இருக்கிறது.

நமது நாட்டை விட பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளாக கருதப்படும் இலங்கை 64வது இடத்திலும், நேபாளம் 81வது இடத்திலும், பங்களாதேஷ் 84வது இடத்திலும், பாகிஸ்தான் 99வது இடத்திலும் இருக்கின்றன. பல செல்வந்தர்களால் அதிகமான உணவுகள் வீணாக்கப்படுவதாகவும், ஏழை எளிய மக்களுக்கு ஒரு நாளுக்கு போதுமான உணவுகூட கிடைப்பதில்லை என்றும் அறிக்கைகள் கூறுகின்றன. குறிப்பாக இந்தியாவை பொறுத்த வரையில் பட்டியலினத்து மக்கள், ஆதிக்குடிகள், தலித்துக்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு உணவு பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை நம் நாடு கவனத்தில் கொள்ள வேண்டும்.            

Comment