No icon

பேராயர் தாமஸ் இக்னேஷியஸ் மக்வான்

திருத்தந்தை, அருட்சகோதரிகளை இணைத்து VHP அவதூறு பேச்சு

குற்றவியல் வழக்கறிஞராக பணி புரியும் டொமினிக்கன் சிஸ்டர்ஸ் ஆஃப் ரோசரி சபையை சார்ந்த அருள்சகோதரி மஞ்சுளா டஸ்கானோ, ஒட்டு மொத்த கத்தோலிக்க திரு அவையின் தலைவராகிய திருத்தந்தையையும், குருக்களையும், அருள்சகோதரிகளையும் இணைத்து தவறாக பேசி அதை  ஊடகங்களில் பரப்பி வரும் அடையாளம் தெரியாத நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 13 ஆம் தேதி வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.

கிறிஸ்தவர்கள் மீது வெறுப்பு பேச்சுகளையும் வன்முறைகளையும் தொடுத்து வரும் விஷ்வ இந்து பரிசத் என்ற உலக இந்து சபாவை சேர்ந்த ஒருவர், போப் உலகில் உள்ள அனைத்து அருட் சகோதரிகளின் கணவர். எப்படியெனில் இந்த அருட்சகோதரிகள் தங்களின் துறவற வார்த்தைப் பாட்டிலே திருத்தந்தைக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு திருத்தந்தை விபச்சாரம் செய்கிறார் என்று குஜராத்தி மொழியில் பேசிய காணொளி காட்சியானது சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. காந்திநகர் பேராயர் தாமஸ் இக்னேஷியஸ் மக்வான் இதுகுறித்து உடனடியாக, துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபரை விசாரிக்க வேண்டும் என்று குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேலுக்கு எழுதிய கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அருள்சகோதரி மஞ்சுளா டஸ்கானோ, “130 கோடிக்கு மேலுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மனதை விஷ்வ இந்து பரிசத் குழுவினர் புண்படுத்தி இருக்கிறார்கள்கத்தோலிக்க திரு அவையின் தலைவரையும் அருள்சகோதரிகளையும் தகாத வார்த்தைகளால் பேசி, தவறாக சித்தரித்து இந்த காணொளி காட்சியை வெளியிட்டு பரப்பி வருகிறார்கள்இது குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்தோம். ஆனால் காவல்துறை இம்மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கியதால், நாங்கள்  குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம். இந்த வழக்கானது நிலுவையில் இருக்கிறது. வருகின்ற நாட்களில் கண்டிப்பாக உயர்நீதிமன்றம் இதற்கான நல்ல தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்என்று UCA செய்தி நிறுவனத்திடம் ஏப்ரல் 14 ஆம் தேதி கூறினார். மாநிலத்தின் 60 இலட்சம் மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் இந்துக்கள். கிறிஸ்தவர்கள் 0.52 சதவீதமே உள்ளனர்.

Comment