No icon

பேராயர் பீட்டர் மச்சாடோ மேட்டர்ஸ்

கண்காணிப்பு குழுவை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

மணிப்பூரில் இந்துக்கள் அடங்கிய பெரும்பான்மை குழுவிற்கும் சிறுபான்மையான கிறிஸ்துவ பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் பல கிறிஸ்தவ தேவாலயங்களும் கிறிஸ்தவ மக்களும் கடுமையாக தாக்கப்பட்டார்கள்.

கிறிஸ்தவர்கள் மீது ஏற்படும் வன்முறைகளை தடுக்க வேண்டும் என்றும், அவர்கள் மீது நடைபெறும் வன்முறைகளை கண்காணிக்க ஒரு குழுவை ஏற்படுத்த வேண்டும் என்றும் பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ அவர்களும், தேசிய ஒற்றுமை மன்றம் மற்றும் இவாஞ்சலிக்கள் ஃபெல்லோஷிப் குழுக்களும் இணைந்து வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தொடுத்திருந்தார்கள். தற்போது உச்ச நீதிமன்றமும் ஒரு கண்காணிப்பு குழுவை அமைப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

பேராயர் பீட்டர் மச்சாடோ மேட்டர்ஸ் இந்தியா செய்தி நிறுவனத்திடம், “உச்சநீதிமன்றம் 2022, செப்டம்பர் 1 ஆம் தேதி எந்தெந்த மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் அதிகமாக தாக்கப்பட்டு இருக்கிறார்களோ, அந்த மாநிலங்களை அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டது. இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்துதான் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகமாக நடந்தேறி வருகின்றன. அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இந்த மணிப்பூர் வன்முறை. மதமாற்ற தடை சட்டம் நடைமுறையில் உள்ள மாநிலங்களில்தான் இது போன்ற வன்முறை சம்பவங்கள் அதிகமாக நடந்தேறி வருகின்றன” என்று கூறினார்

2021 இல் 501 தாக்குதல் சம்பவங்களும் 2022 இல் 598 தாக்குதல் சம்பவங்களும், 2023 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் 123 வன்முறை வழக்குகள் பதிவாகி உள்ளன என்று கிறிஸ்துவ ஐக்கிய மன்றம் தெரிவித்துள்ளது.

Comment