No icon

கர்தினால் பிலிப்பு நேரி

ஒருங்கிணைந்த பயணத்தை ஊக்குவிக்க வேண்டும்

திருஅவையைச் சார்ந்த அனைவரும் புரிந்து கொள்ளப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும், பாராட்டப்பட வேண்டும், என்ற ஆழமான விருப்பத்தை ஒருங்கிணைந்த பயணத்திருஅவை உறுதிசெய்கின்றது என்று கர்தினால் பிலிப்பு நேரி ஃபெராவோ கூறியுள்ளார்.

மே 07 ஞாயிற்றுக்கிழமை முதல் 08 செவ்வாய்க்கிழமை வரை பெங்களூரில் உள்ள புனித யோவான் தேசிய அறிவியல் நிறுவனத்தில் நடைபெற்ற, CCBI இன் முக்கிய செயல்பாடுகளைத் திட்டமிடுவதற்கான தேசிய அளவிலான கருத்தரங்கின் தொடக்க விழாவில் கோவா மற்றும் டாமன் உயர் மறைமாவட்டத்தின் பேராயரும் CCBI எனப்படும் இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் பிலிப்நேரி ஃபெராவோ இவ்வாறு கூறினார்.

ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்கள் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் ஒருங்கிணைந்த பயணத் திருஅவையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்த கர்தினால் ஃபெராவோ அவர்கள், சினோடலிட்டி என்பது ஒன்றிணைந்த ஒரு பயணம் மற்றும் பகுத்தறிவுடன் கூடிய பயணம் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

"சினோடல் லீடர்ஷிப்" என்பது திருஅவையில் தலைமைத்துவத்தின் புதிய மாதிரிக்கு அழைப்புவிடுக்கின்றது என்றும், இது புரிந்து கொள்ளப்படவும், மதிக்கப்படவும் வேண்டும் என்ற ஆழமான விருப்பத்தை உறுதி செய்கின்றது என்றும் கர்தினால் ஃபெராவோ கூறியுள்ளார்.

இறைவனின் பணியை அதிக ஆர்வத்துடன் முன்னெடுத்துச் செல்வதில் பாமர மக்கள், அருள்பணியாளர்கள் ஆகியோரின் மன உறுதியையும் ஈடுபாட்டையும் உயர்த்தும் ஒரு உயர்மட்டத்திற்கு, சினோடல் கலாச்சாரத்தை எடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படவும் கர்தினால் ஃபெராவோ வலியுறுத்தியுள்ளார்.

இரண்டு நாள் நடைபெற்ற இக்கருத்தரங்கில் CCBI பேரவைத் தலைவர்கள், நிர்வாகிகள், பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Comment