No icon

பெங்களூருவில் பசியால் வாடுவோருக்கு உதவும் ரொட்டி மையம்!

கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் தன்னலமற்ற சேவைகளின்  தொடர்ச்சியாகப் பெங்களூரு நகரில் பசி, பட்டினியால் வாடுவோர் மற்றும் வீடற்றோருக்குரொட்டி மையம்ஒன்றைப் பிரான்சிஸ்கன் துறவு சபையினர் (OFM) நடத்தி வருகின்றனர். அருள்பணி. டிரிவர் டிசோசா, OFM 2003 ஆம் ஆண்டு ஏழைகளுக்குச் சேவை செய்ய புனித அந்தோணியார் சேவா நிலையத்தைத் துவங்கினார். முதலில் சமூக சேவை மையமாகத் துவக்கப்பட்ட இந்தச் சேவை நிலையம், ‘கோவிட்பெருந்தொற்றுக் காலத்தில் ஒவ்வொரு நாளும் 750 பேருக்கு உணவு வழங்கி சேவையாற்றியது.

தற்போது பசி, பட்டினியால் வாடுவோருக்கு, குறிப்பாக வேற்று மாநிலங்களில் இருந்து குடியேறி பணியாற்றும் ஏழைத் தொழிலாளிகள், மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளின் உறவினர்கள்  என உதவி தேவைப்படும் அனைவருக்கும்புனித அந்தோணியார் ரொட்டி மையம்என்ற பெயரில் உணவளித்து வருகிறது. இந்த மையத்தில் பணியாற்றும் பணியாளர்கள் எவ்வித ஊதியமும் இன்றி, தாங்களே முன்வந்து சேவையாற்றுவது பாராட்டுதற்குரியது.

Comment