
ஜி-20 மாநாட்டிற்கு இந்தியக் கத்தோலிக்க ஆயர்களின் வாழ்த்துகள்!
ஜி-20 கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு இந்தியாவின் தலைநகரான டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெற்றது. பயங்கர வாத அமைப்புகளுக்கு எதிராக இணைந்து செயல்படுதல், பயங்கரவாதத்தை எதிர்க்கும் குழுக்களுக்கு ஆதரவளித்தல், ஊழலை ஒழிக்க சர்வதேச அளவில் ஒன்றிணைதல் எனப் பல தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இந்த ஜி-20 உச்சி மாநாடு வெற்றி காண வேண்டுமென்று இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையானது வாழ்த்துகளைத் தெரிவித்தது.
இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் மாமன்றத்தின் தலைவர் பேராயர் ஆன்ட்ரூஸ் தாழத், “ஜி-20 கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு நல்ல முறையில் நடந்திட நான் எனது செபங்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார். இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச்செயலாளர் பேராயர் பெலிக்ஸ் மச்சாடோ, “ஜி-20 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் எடுக்கப்படுகின்ற முடிவுகள் அனைத்தும் புறம்பே தள்ளப்பட்ட, ஒதுக்கப்பட்ட, ஏழை, எளிய மக்களின் வாழ்வை முன்னிலைப்படுத்துவதாகவும், உயர்த்தக்கூடியதாகவும் அமைய வேண்டும்” என்று கூறினார்.
Comment