சமூகக் குரல்கள்
- Author ஸ்ரீநிதி --
- Thursday, 25 Apr, 2024
“ஒரு பக்கம் மக்கள்; மறுபக்கம் ஆர்.எஸ்.எஸ். கொள்கை என உள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிப்பதற்கு ஆட்சியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை மாற்றவும், தமிழர்களின் கலாச்சாரத்தையும், அடையாளத்தையும் ஒழிப்பதற்கும் பா.ச.க.வினர் முயற்சி செய்து வருகின்றனர். பா.ச.க. அரசின் மக்கள் விரோதப் போக்கை முறியடிக்க வேண்டும். இதிலிருந்து நாடும், நாமும், மீண்டுவர வேண்டும்.”
- திரு. இராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினர்
“நரேந்திர மோடி பிரதமராகி பத்து ஆண்டுகளாகின்றன. ஆனால், இப்போதுதான் கச்சத்தீவு பற்றிப் பேசுகிறார். இதற்கு முன்னர் பா.ச.க. இருமுறை ஆட்சியில் இருந்தது. அப்போது வாஜ்பாய் பிரதமராக இருந்துள்ளார். அப்போதும் கச்சத்தீவு மீட்புக்கான நடவடிக்கை இல்லை. தேர்தலுக்குத் தேர்தல் கச்சத்தீவு குறித்துப் பேசுவதும், பின்னர் மறந்துவிடுவதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது. கச்சத்தீவை மீட்பதில் பா.ச.க.வுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் உண்மையில் அக்கறை உண்டு என்றால், சர்வதேச நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும்.”
- திரு. பழ. நெடுமாறன், தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு
“மோடி ஆட்சியில்தான் ரூ. 90 ஆயிரம் கோடிக்கு வங்கிகளில் மோசடி நடைபெற்று, அதில் ரூ. 53 ஆயிரம் கோடி வரை ஏமாற்றிய 23 பேர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இரபேல் விமானம் வாங்கியதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 41 ஆயிரம் கோடி. தேர்தல் பத்திர நன்கொடைகள் மூலம் பா.ச.க. பெற்ற தொகை ரூ. 8 ஆயிரம் கோடி. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. ஆகிய அமைப்புகளின் விசாரணையை எதிர்கொண்டு வரும் 56 கார்ப்பரேட் நிறுவனங்கள் பா.ச.க.வுக்கு வழங்கிய தொகை ரூ. 2,592 கோடி. பா.ச.க. ஆட்சி வீழ்த்தப்படுவதும், மோடியின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து இந்தியா மீட்கப்படுவதும் உறுதியாகி விட்டது.”
- திரு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
Comment