No icon

  நம் வாழ்வு 2.0  Namvazhvu 2.0

Download Today in Your Android Mobile

இலக்கியத் திங்களாம் பிப்ரவரியில் இன்னுமொரு இதழியல் புரட்சியை, உலக அளவில் வெளிவரும் ஒரே கத்தோலிக்க கிறிஸ்தவ வார இதழான "நம் வாழ்வு" செய்கிறதுபொன்விழாவிற்கு இன்னும் ஈராண்டுகளே உள்ள நிலையில், இதழியியல் துறையின் அனைத்து பரிமாணங்களையும் தமதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் நம் வாழ்வுக்கு உண்டு

பத்திரிகைகளையும் பத்திரிகையாளர்களையும் மிகவும் நேசிக்கும் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பினை ஏற்று, காலத்தின் தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப, தன்னை தகவமைத்துகொள்வது நம் வாழ்வின் கடமை. காலத்தின் அறிகுறிகளுக்கேற்ப தன்னைத்தானே திரு அவை வளர்த்துக்கொண்டு இறையாட்சிக்கான முகத்துவாரமாக விளங்க வேண்டும் என்பதே நம் திருத்தந்தையின் அவா.

காலத்தே பத்திரிகை வழியாகவும், அதனைத் தொடர்ந்து வானொலியிலும், தொடர்ந்து தொலைக்காட்சி வழியாகவும், இன்று டுவிட்டர் முதற்கொண்டு அனைத்து  சமூக ஊடகங்கள் வழியாகவும் வத்திக்கான் திருப்பீடம் பயணிக்கிறது என்பது நாமறிந்ததே. தாம் பயணிப்பதோடு மட்டும் நில்லாமல், ஒட்டுமொத்த உலகத் திரு அவையும், திரு அவையின் உறுப்பினர்களும் இறையாட்சியின் வித்துக்களாக இருக்க வேண்டும் என்று அவள் ஆசிக்கிறாள்திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் வாய்ப்புக் கிடைக்கிறபோதெல்லாம் ஊடகத்தின் அனைத்து பிரிவுகளையும் முறையாகப் பயன்படுத்தி துணிவுடன் செயல்படுகிறார்அவர்தம் ஒவ்வொரு வார்த்தையும் அண்டவெளியில் பயணித்து, அலைக்கற்றைகளில் இளைப்பாறி, காற்றலைகளில் தவழ்ந்து, அகண்ட அலைவரிசைகளில் நம்மை வந்தடைந்து கொண்டேயிருக்கிறது.

"நம் வாழ்வு" வார இதழும் கடந்த ஆறு ஆண்டுகளில் எல்லா நிலையிலும் எல்லாத் தளங்களிலும் தன்னைத் தானே மெருகேற்றி, தனக்கான அடையாளத்தை நிலைநிறுத்தி வருகிறது. ஏனைய பொதுவெளி ஊடகங்களுக்கு "நம் வாழ்வு" வார இதழ் சளைத்ததல்ல என்பதை நிருபித்துள்ளது. இடம், பொருள்,ஏவல் என்பது தமிழ் இலக்கணத்திற்கு மட்டுமல்ல, தனக்கும் முற்றிலும் பொருந்தும் என்பதை உணர்ந்து தம்மைத்தாமே தகவமைத்துக்கொண்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த எக்ஸ்ப்ளோவிஸ் சொல்யூஷன்ஸ் (Xplowiz Solutions) என்ற நிறுவனத்தோடு இணைந்து, அனைத்து சந்தாதாரர்களையும் ஒற்றைப் புள்ளியில் ஒருங்கிணைக்க, EaziMagazines   என்ற  சாப்ட்வேரை உருவாக்கினோம். இதன் மூலம் சந்தாதாரர்களின் விவரங்களை விரல் நுனியில் அடக்கி, மிக விரைவாக செயல்பட வழிவகுத்தோம். சந்தாவைப் புதுப்பிப்பதற்கான வேண்டுகோள் உட்பட, அனைத்து விதமான குறுஞ்செய்திகளையும் டிராய் அமைப்பின் உரிய வழிகாட்டுதலோடு, ஒப்புதல் பெற்று அனுப்புகிறோம். சந்தா புதுப்பிக்கப்பட்டவுடனே அதற்கான ஒப்புதல் குறுஞ்செய்தி, சந்தா முடிவடையும் தேதியை சந்தா எண்ணோடு குறிப்பிட்டு, ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான லிங்க் வசதியுடன் குறுஞ்செய்தி, நாங்கள் திருப்பலிக்கு வருவது குறித்து முன்னறிவிப்பு செய்தி என்று இதுவரை  25 இலட்சம் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளோம்

ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கென்று சிசி அவெனியு (CC Avenue) நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துஅதற்கான வசதியை இணையதளம் வழியாகவும் இந்த சாஃப்ட்வேர் வழியாகவும் செய்தோம். இதன் வழியாக மட்டுமே ஏறக்குறைய 10000 பேர் தங்கள் சந்தாவைச் செலுத்தியுள்ளனர் என்பதே உள்ளங்கை நெல்லிக்கனி

நம் வாழ்வுக்கென்று பிரத்யேகமாக சிறப்பான கட்டமைப்புகளைக் கொண்டு, காண்போரைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் இணையதளத்தை www.namvazhvu.in முதன்முறையாக உருவாக்கினோம். ஒவ்வொரு வாரமும் செய்திகளும் கட்டுரைகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் புதிய முறையிலான நற்செய்தி அறிவிப்பாக விளங்குகிறது. மேலும் அமெரிக்காவின் ஃபிளிப்ஸ்நாக் (Flipsnack) நிறுவனத்தாருடன் ஒப்பந்தம் செய்து, கொரோனோ பெருந்தொற்றுக் காலத்திலிருந்து ஃபிளிப்புக் வடிவில், -புக்காக உங்கள் கணினியிலும், மொபைலிலும் புரட்டி புரட்டி படிக்கும் வண்ணம் கடந்த மூன்றாண்டுகளாக பதிவேற்றம் செய்கிறோம்

கடந்த ஐந்தாண்டு காலமாக மக்களிடம் புழக்கத்தில் உள்ள UPI முறையில் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தி அமேசான் பே, கூகுள்பே, பேடிம்.. உள்ளிட்ட முறைகளில் பணம் செலுத்த வழிவகைசெய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு பணம் செலுத்தும் நெஃப்ட் முறையை மேலும் செழுமைப்படுத்தியுள்ளோம்

வாசகர்கள் எங்களைத் தொடர்புக்கொள்ள ஐவிஆர்எஸ் முறையில் இயங்கும் தரைவழி தொலைபேசியை மேம்படுத்தியுள்ளோம்வாசகர்களுடனான தொடர்பை மேலும் வலிமைப்படுத்த பிரத்யேகமாக ஐந்து செல்போன் எண்களை வாங்கி, அவற்றின் வழியாக உடனுக்குடன் முடிந்தவரை அவர்களுடைய தேவைகளை நிறைவுச் செய்து வருகிறோம்.

எம்முடைய பிரத்யேக EaziMagazines ஈசிமேகசின் சாப்ட்வேரைக் கொண்டு வாட்ஸ்அப் எண்கள் கொண்ட அனைத்து வாசகர்களையும் ஒருங்கிணைத்து, Broadcast முறையில், தினந்தோறும் இறைவார்த்தையையும் செய்திகளையும் பகிர்ந்து கொள்கிறோம்.  ஏறக்குறைய பனிரெண்டாயிரம் பேரையும்  250 பேர் வீதம் 50 குழுக்களாக்கி தொடர்பில் இருக்கிறோம். வாரந்தோறும் ஈமேகசின் முறையில் 5000 ஈமெயில்களைத் தொடர்புக்கொண்டு திரு அவை சார்ந்த செய்திகளையும் நம் வாழ்வு -புக்கையும் அனுப்புகிறோம். நம் வாழ்வு அலுவலகத்தில் தொண்டாற்றும் ஒவ்வொரு உடன் உழைப்பாளரும் கடிகார முள்ளைப்போல களைப்பின்றி அலுவலக நேரத்தில் இயங்கிக் கொண்டிருப்பதே இதற்கு அத்தாட்சி

நம் வாழ்வுக்கென்று யுடியூப் சேனலை Namvazhvu TV (நம் வாழ்வு டி.வி) என்ற பெயரில் உருவாக்கியுள்ளோம். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் (Namvazhvu) என்று அனைத்து சமூக ஊடகங்களிலும் எங்களுக்கென்று கணக்குகளைத் தொடங்கி, சமூக அக்கறையுடனும் பொறுப்புணர்வுடனும் செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறோம்.   இந்த வார  நம் வாழ்வின் அட்டைப்படமே எம் 247 நேர உழைப்பிற்கான வரைபடம் என்றால் அது மிகையன்று.

இந்த நிலையில்தான் இந்த இலக்கியத் திங்களில் "நம் வாழ்வு" வார இதழ் இன்னுமொரு புரட்சியை சிரத்தையுடன் மேற்கொள்கிறது. கொரோனா பெருந்தொற்றுக்காலத்திற்குப் பிறகு, பெரும்பாலான அச்சு ஊடகங்கள் முடமாகியுள்ள நிலையில், "நம் வாழ்வு" வார இதழ்பெரும் பொருட்செலவில்உலகில் உள்ள தமிழ்ப்பேசும் கிறிஸ்தவர்களுக்கென்று பயனுள்ள வகையில், இன்றைய இளைய தலைமுறையையும் தன் வசப்படுத்தும் இலட்சிய நோக்கில், பத்துபேரில் ஒன்பது பேர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் தளமான ஆன்ட்ராய்டு இயங்குதளத்தைப் பயன்படுத்தி, Namvazhvu என்ற ஆன்ட்ராய்டு ஆப்பை உருவாக்கியிருக்கிறோம்

உலக அளவில் முதன் முதலில் கத்தோலிக்கச் செய்திகளுக்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு, தினந்தோறும் பதிவேற்றம் செய்யப்பட்டு, upto date-ஆக, அனைத்து செய்திகளையும் உரிய படங்களுடன் பதிவேற்றம் செய்து, எல்லாரும் உலகத் திரு அவையோடு ஒவ்வொரு நொடிப்பொழுதும் பயணிக்க வாய்ப்பளிக்கிறோம்இதுதான் உலகின் முதல் கத்தோலிக்க தமிழ் செய்தி ஆன்ட்ராய்ட் ஆப்.

எல்லாத் தலைமுறையும் தாய்த் திருஅவையோடு இணைந்து கூட்டியக்க முறையில் பயணிக்க, உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறும் இந்நாட்களில், இந்த ஆன்ட்ராய்டு ஆப்பை நம் வாழ்வு வார இதழ் வழியாக, நான் பெரிதும் மதித்துப் போற்றும் நம் வாழ்வு வாசகர்கள் முன்னிலையில் தமிழ்க்கூறும் நல்லுலகத்திற்கு இன்று அறிமுகப்படுத்துகிறேன்

ஆன்ட்ராய்ட் மொபைல் உள்ள ஒவ்வொரு வாசகரும் தங்களின் கூகுள் ப்ளே ஸ்டோரில் நம் வாழ்வு Namvazhvu என்று தட்டச்சு செய்துதோன்றும் எம் ஆன்ட்ராய்ட் ஆப்பை உடனே டவுன்லோடு செய்து, முடிந்தவர்கள் கேட்கப்படும் விவரங்களைக் கொடுத்து அல்லது பின்னர் என்று ஒத்திவைத்து, திரு அவையின் செய்திகளையும் கட்டுரைகளையும் உடனுக்குடன் படித்து உலகிற்கு ஒளியாக, சாரமுள்ள உப்பாக விளங்க உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

விலையுயர்ந்த முத்துகளை கற்றறிந்த உங்கள் முன் வைத்துள்ளேன்நீங்கள் மட்டுமின்றி, உங்கள் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தாருடைய ஆன்ட்ராய்டு போன்களில் நீங்களே டவுன்லோடு செய்து இதனைப் பரவலாக்கம் செய்து, நம் தமிழகத் திரு அவை புதியப் பாதையில் புத்தம் புதிய திசையில் பயணிக்க உதவிடுங்கள்எங்களின் உழைப்பிற்கான அங்கீகாரம் உங்களின் உடன் பங்கேற்பும் ஒத்துழைப்பும் மட்டுமே.

இந்த ஆப்பிற்கு முடிந்தால் 5 ஸ்டார் ரேட் கொடுத்து எங்களை இன்னும் தமிழ் வானில் ஒளிரச் செய்திடுங்கள். உங்களின் புன்னகையில் எங்களின் வியர்வைத்துளி வைரமாகும். உங்களின் அறிவுத் தெளிவில் எங்கள் பேனாமுனை இன்னும் வலிமையாகும். உங்களின் பங்கேற்பில் தமிழ்த்தாய்த் திரு அவை தரணியில் உயர்நிலை பெறும்.

வாருங்கள்! ஓர் அறிவார்ந்த திரு அவையைக் கட்டியெழுப்புவோம்அறிவுதான் நம் எட்டாவது திருவருட்சாதனமன்றோ?!

Comment