No icon

யாருக்காக?

இந்த நிதிநிலை யாருக்காக?

ஒன்றிய முதன்மை அமைச்சர் மோடி தலைமையில் பா..கூட்டணி அரசு அடுத்த ஐந்து ஆண்டுக்கான புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள இச்சூழலில், இந்தக் கூட்டணி அரசு தனது முதல் நிதிநிலை அறிக்கையை மக்கள் மன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்திருக்கிறது. நிதி அமைச்சர்களாக இருந்த மொரார்ஜி தேசாய், மன்மோகன் சிங், . சிதம்பரம் ஆகியோரைவிட ஏழாவது முறையாகத் தொடர்ச்சியாக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் முதல் மத்திய நிதி அமைச்சர் என்ற பெருமையையும், முதல் பெண் நிதி அமைச்சர் என்ற புகழையும் தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பெறுகிறார்.

இந்தியத் திருநாட்டை உலகளவில் தலைநிமிரச் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கையைக் கண்டது நம் மக்களவை. இந்திய நாட்டின் பொருளாதாரச் சமூகக் கட்டமைப்புகளை உயர்த்தி, மிகப்பெரிய பொருளாதார வலிமையுள்ள நாடாக இந்தியாவை மாற்றிய நிதிநிலை அறிக்கைகளும், அதே வேளையில் கூரிய இலக்கும், தெளிந்த சிந்தனையும், முறையான கட்டமைப்பும், செயல்பாடுகளும் கொண்டிராத நிதிநிலை அறிக்கைகளையும் இந்த நாடு கண்டிருக்கிறது. அந்த வகையில், 2024-25 - ஆம் ஆண்டுக்கான, இந்த நிதிநிலை அறிக்கை நிதி அமைச்சருக்குப் பாராட்டுதலைக் கொண்டு வந்தாலும், குறிப்பிடத்தக்க சிறப்புக் கூறுகள் ஏதும் காணப்படாத வகையில் இது பெருத்த ஏமாற்றமான நிதிநிலை அறிக்கையாகவே உள்ளது.

கூட்டணி அரசுகளின் தயவோடு இயங்கும் இந்த அரசு, தனது கூட்டணிச் சகாக்களுக்குச் சலுகை வார்க்கும் நிதி நிலையாகவே இது விமர்சிக்கப்படுகிறது. ஆந்திரா மற்றும் பீகாருக்குச் சிறப்புத் திட்டங்களையும், பெரும் பொருள் உதவிகளையும் வழங்கும் இந்த நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த வகையான சிறப்புத் திட்டங்களையும், நிதி உதவிகளையும் அறிவிக்காத வகையில், இது ஒரு பாரபட்சம் கொண்ட நிதிநிலை அறிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

உற்பத்தி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, சீர்திருத்தம் எனப் பல்வேறு உட்கூறுகளைக் கொண்டதாக இந்த நிதிநிலை அறிக்கை இருந்தாலும், இளையோர், பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகள் நலன் சார்ந்த திட்டங்கள் அதிகமாகச் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆயினும், வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல், அது நடைமுறையிலும் தொடர வேண்டும் என்பதே நமது அவா.

கவர்ச்சிகரமான திட்டங்கள் அலங்கார வார்த்தைகளால் வர்ணிக்கப்பட்டிருப்பதாகவும், செயல்பாட்டில் எந்தச் சாத்தியக்கூறுகளையும் இந்த அறிக்கை கொண்டிருப்பதாகத் தெரியவில்லை என்றும் பொருளியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கான சிறப்புச் சலுகைகளைக் காணும் சூழலில், ‘கூட்டணிக் கட்சிகளைத் திருப்திபடுத்த பிற மாநிலங்களைக் காவு கொடுப்பதா?’ எனக் கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி. மேலும், இந்த நிதிநிலை அறிக்கை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை நகல் எடுத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியதோடு, இந்த நிதிநிலை அறிக்கை அம்பானி-அதானிகளுக்கானதே தவிர, இந்த நாட்டின் சாதாரண குடிமகனுக்கானது அல்ல என்ற உண்மையையும் அம்பலப்படுத்தியிருக்கிறார். கூட்டணிக் கட்சிகளுக்கும், பா... ஆளும் மாநிலங்களுக்கும் அதீதமாக நிதி ஒதுக்கீடு வழங்கி, மற்ற மாநிலங்களை மாற்றாந்தாய் சிந்தனையோடு புறந்தள்ளியிருக்கிறது இந்த நிதிநிலை அறிக்கை.

ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது பன்முக வளர்ச்சி கொண்டதாகவே அமைய வேண்டும். அந்த வளர்ச்சி எங்கும், எதிலும் சீரான வளர்ச்சி கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் வளர்ந்து கொண்டிருந்தால் அது வளர்ச்சியல்ல, வீக்கம்! இது நாட்டின் சமநிலையையே குலைத்துவிடும். ஒரு கண்ணுக்கு வெண்ணெய்யும், மறு கண்ணுக்குச் சுண்ணாம்பும் வைக்கும் இந்த நிதி நிலைப்பாட்டால், நாட்டின் ஒரு பகுதி வீக்கம் அடைவதும், மற்றொரு பகுதி வீழ்ச்சி அடைவதும்வலிமையான பாரதத்திற்குநல்லதல்ல.

இத்தகைய நடுநிலையற்ற நிர்வாகத்தால் நாட்டின் கூட்டாட்சித் தத்துவங்கள் சிதைக்கப்படும்என்றும், “ஏற்ற-இறக்கம் கொண்ட சமூக நீதியற்ற சமூகத்தை இது உருவாக்கும்என்றும் ஒன்றிய அரசை எச்சரிக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு. . ஸ்டாலின். மேலும், தமிழ், தமிழ்நாடு, தமிழர் என எந்த வார்த்தைகளும் இந்த நிதிநிலை அறிக்கையில் காணப்படவில்லை என்பதும், பேரிடர் இழப்புகளைச் சீரமைக்க உதவி நாடிய போதும் சட்ட ரீதியாகவே வழங்கப்பட வேண்டிய உதவிகள் இன்னும் வழங்கப்படாததும் பா... தலைமையிலான ஒன்றியக் கூட்டணி அரசு தமிழ்நாட்டிற்கு இழைக்கும் பெரிய அநீதி என்றும் விமர்சித்திருக்கிறார். அவ்வாறே, இந்த நிதிநிலை அறிக்கை ஒருசாராரைத் திருப்திபடுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டதுபோல இருப்பதாகவும், ஆகவே, ‘இது நிதிநிலை அறிக்கை அல்ல; கூட்டணி ஒப்பந்தம்எனவும் அவர் எள்ளி நகையாடி இருக்கிறார். தமிழ்நாடு முதல்வர் குறிப்பிடுவது போல, வெள்ள நிவாரணப் பணிகளுக்கு அசாம், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பீகார் ஆகிய மாநிலங்களுக்குப் பெரும் நிதி உதவி வழங்கியுள்ள இச்சூழலில், நாம் சந்தித்த சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி பெரும் வெள்ளச் சேதங்களுக்கு ஒரு சிறு துளி கூட பொருளுதவி அளிக்காதது பெருத்த ஏமாற்றமே; இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகமே!

அனைத்து வகைகளிலும் தமிழ்நாடு இந்த நிதிநிலை அறிக்கையில் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது; இது பெரும் கண்டனத்துக்குரியது! நாமும் இந்தியர்கள்; பிற மாநிலங்களை விட அதிக வரி செலுத்துபவர்கள்! குறிப்பாக, தென் மாநிலங்கள் அதிலும் சிறப்பாகத் தமிழ்நாடு அதிகமாகவே ஒன்றிய அரசுக்கு வரி செலுத்தும் சூழலில், நாம் கைமாறாக நிதிநிலை அறிக்கையில் எதுவுமே திரும்பப் பெற முடியாத சூழலில் இருப்பது பெரும் கவலைக்குரியதே!

இந்த நிதிநிலை அறிக்கை வடமாநிலங்களையும், பா... கூட்டணிக் கட்சிகளையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைச் சமநிலையோடு ஊக்குவிப்பதாக அமையவில்லைஎனக் குறிப்பிடும் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், “தமிழ்நாட்டிற்கு எந்த விதமான திட்டங்களும் அறிவிக்கப்படாத நிலையில், இது தமிழ்நாட்டின் மீது ஒன்றிய பா... அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறதுஎன்றும் விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற வகையில் கடந்த பத்து ஆண்டுகளில் ஒன்றிய பா..அரசின் முறையற்ற நிதிநிலைக் கொள்கையால் இந்திய நாட்டின் பொருளாதாரமே சீர்குலைந்திருக்கிறது என்பதே உண்மை. அது இன்றைய ஒன்றிய பா... கூட்டணி ஆட்சியிலும் தொடர்வது மிகுந்த வேதனைக்குரியது. மேலும், “பா... அரசின் நிதிநிலை அறிக்கை ஒருபோதும் ஏழை மக்களுக்கானதாக இருந்ததில்லைஎனக் குறிப்பிடுகிறார் திரு. வைகோ. ஆகவே, “இந்த நிதிநிலை அறிக்கை, குறைந்த விலையில் மக்களின் நிலத்தைக் கையகப்படுத்தி முதலாளிகளுக்குத் தருவதாகவும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து அவர்களைக் கூலிகளாக அடையாளப்படுத்துவதாகவும், முதலாளிகளுக்கு வரிகளையும், வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்துவிட்டு, ஏழை மக்களின் வரிப்பணத்தை மூலதனமாக வாரி வழங்குவதாகவும் இருக்கிறதுஎன்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன்.

மனித வளம், இயற்கை வளம், தொழில் வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி எனப் பல்வேறு வளங்களை இந்தியத் திருநாடு கொண்டிருந்த போதிலும், அது முறையாகக் கணிக்கப்படாததும், சரியாக முறைப்படுத்தப்படாததும், சீராகப் பகிரப்படாததும் ஆளும் ஒன்றிய பா... அரசின் நிர்வாகக் கையறு நிலையையே குறிக்கிறது. இத்தகைய வளங்கள் இருந்தும், எல்லா மக்கள் மீதும் முறையான அன்பும், அக்கறையும், கரிசனையும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான திட்டங்களும் கொண்டிராத ஓர் அரசால், அரசனால் எந்தப் பயனும் கிட்டுவதில்லை. இதையே பொதுமறை தந்த ஐயன் திருவள்ளுவர்,

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே

வேந்தமை வில்லாத நாடு’ (குறள் 740)

என்று குறிப்பிடுகிறார். அதாவது, எல்லா விதமான செல்வ வளங்கள் இருந்தாலும், குடிமக்கள்மீது அன்பு இல்லாத அரசு அமைந்துவிட்டால் அதனால் எந்தப் பயனும் அமையப் போவதில்லை என்றே குறிப்பிடுகிறார்.

இறுதியாக, ஒன்றிய பா... அரசின் ஒவ்வோர் ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் இளையோரின் கனவு தொடர்ந்து சிதைக்கப்படுவது பெரும் கவலை அளிக்கிறது. ‘நல்ல காலம் விடியும்என்னும் நம்பிக்கையில் உள்ள இளையோருக்கு இது பெருத்த ஏமாற்றமே. பொற்காலத்தை இந்திய மண்ணில் காணும் அவர்களின் கனவைச் சிதைப்பதாகவே இருக்கிறது இந்த நிதிநிலை அறிக்கை. கூட்டணிச் சகாக்களுக்கு வரிப்பணத்தை வாரி வழங்கும் இந்த அரசின் நிதிநிலை அறிக்கையை, ‘சந்தர்ப்பவாத நிதிநிலை அறிக்கைஎன்று அழைப்பதே பொருத்தம். சந்தர்ப்பவாதம் சவாரி செய்யாத நல்ல அரசியல் களம்தான் எங்கே  இருக்கிறது? வல்லரசு நாடு, டிஜிட்டல் இந்தியா, ‘மேக் இன் இந்தியாஎன்று மார்தட்டிக் கொள்ள வளமையான இந்தியாவைக் காண கனவு கொண்டிருக்கும் பா... அரசு தீட்டும் திட்டங்களும், வெளியிடும் நிதிநிலை அறிக்கைகளும் அனைத்துத் தளங்களிலும்  தோல்விக்கானதாகவே இருக்கின்றன. பா... அரசின் இத்தகைய நிலையைக் காணும்போது...

குதிரை ஏறப்போவதாகக் கூறிக்கொண்டே

காலம் முழுவதும் கழுதை மேல் ஊர்வலம்!’

என்ற கவிஞர் அரவிந்தனின் வரிகள்தான் நம் நினைவுக்கு வருகிறது.

அன்புத் தோழமையில்,

முதன்மை ஆசிரியர்

Comment