No icon

திருத்தந்தையின் முழக்கம்

நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்:

அன்னை மரியாவின் வாழ்வில் துயர் நிறைந்த வேளைகள் இருந்தன; இருளை நோக்கி நகர்ந்த நேரங்களும் இருந்திருக்கக்கூடும். ஆனால், அவர் எப்போதும் பணிவு என்னும் நற்பண்பிலிருந்து விலகவில்லை. அவரில் மனத்தாழ்மை என்பது பளிங்கு போன்ற ஓர் உறுதியான நற்பண்பாக இருந்தது.”        

- மே 22, ஞாயிறு மறைக்கல்வி உரை

நாம் அனைவரும் இயேசு கிறிஸ்துவில் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளதால், ஒன்றித்துப் பணியாற்றுவதும், ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்வதும் மிகவும் முக்கியம்.”

- மே 22, ஹாங்காங் கிறிஸ்தவ அமைப்பின் பிரதிநிதிகளுக்கான செய்தி

வன்முறைகள் நிறைந்து காணப்படும் இன்றைய நவீன உலகில், சவால்களை எதிர்நோக்கும் மனவலிமை பெற்ற சிறுவர்-சிறுமிகளை உருவாக்க உதவும் வகையில் புதிய கல்விக் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும்.” 

- மே 24, இயேசு சபை கல்வியாளர்களுக்கான செய்தி

நம் வாழ்க்கையில் நேரிடும் துன்பங்கள் மற்றும் சிரமங்களுக்கு மத்தியிலும், மகிழ்ச்சி மற்றும் துயரங்களுக்கு  மத்தியிலும்இயேசுவின் பாதையில் தொடர்ந்து பயணிப்பதற்குத் தூய ஆவியார் நம்மை அழைக்கின்றார்.”

- மே 24, திருத்தந்தை பிரான்சிஸ்எக்ஸ்’(டுவிட்டர்) தளப்பதிவில்

இளையோர் வாழ்க்கையின் தளத்தில் தொலைந்து போகலாம். ஓர் இருண்ட தருணத்திலிருந்து வெளியேறுவதற்கான முக்கியச் செயல் தனியாக நடக்கக்கூடாது. ஏனென்றால், தனியாக இருந்தால் உங்கள் நோக்கத்தை இழக்கிறீர்கள். எனவே, இளையோர் ஒருபோதும் தனித்து நடமாடக்கூடாது; நட்புறவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.”

- மே 25, யூபிலி ஆண்டிற்கான இளம் கத்தோலிக்கர்கள் சந்திப்பு

Comment